அன்பு

உன் கனவுகள் மேய் பட்டாலும்
கனவாகவே கலைந்தாலும்

உன் காதல் கை சேர்த்தாலும்
பகல் கனா போல் கரைந்தாலும்

கூன் கொண்டு நரை தட்டி
படுக்கை படுக்கை என்றானாலும்
உலகம் வியக்க சான்று மனிதனாய் நீ ஆனாலும்

வலியோடு துடித்தாலும்
கழிபோடு சிரித்தாலும்

என்றும் உன்னோடு நான் இருப்பேன்
என் உயிரே
என் உலகமே
துணிந்து வாழ்க்கையை எதிர் கொள்
சரிந்து விழுந்தால் என் தோள் தாங்கும்

உலாவிடும் உயிர்


அயர்ந்து உறங்கும் உலகு
அலைந்து திரியும் நம் உயிர்

வெறித்து கிடக்கும் வீதியில் ஓர் சந்திப்பு
இனம் புரியாத ஓர் ஈர்ப்பு
காரணம் இல்லாத சிரிப்பு

கைகோர்த்து ஓர் உலா
ஓடி திறிகிரோம்
ஆடி அயற்கிறோம்

காலையில் எழுகிறோம் எல்லாம் மறந்து
எதேர்ச்சியான சந்திப்பு
எங்கேயோ பார்த்த நினைவு

எங்கு தான் என்று தெரியவில்லை
புன் முறுவலோடு பிறிகிறோம்
நாம் மறந்தாலும் நம் உயிர் மறவாது

கண்மணி

கண்மணியின் அம்மா இறந்து இன்றோடு நாலு வருஷம் ஆகிருச்சு.
ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் அப்பாவுக்கு வேற ஒருத்தங்கள கல்யாணம் பண்ணி வச்சாங்க.

விழியோரம் வழியும் கண்ணீரை துடைத்தபடி டைரியில் புது அம்மாவை நினைத்து எழுதினாள்,
“என்றாவது ஒரு நாள் நா ஓடி வந்து உன்னை கட்டி பிடித்து,
அது உனக்கு பிடிக்காமல் போனால்,
அப்டியே நின்று விடு, நான் புரிந்து கொண்டு விலகி விடுவேன்,
ஆனால் பிடிக்கவில்லை என்று என்னை கீழே தள்ளி விடாதே..”என்று .
tube light ஐ அணைக்காமல் டைரியை கட்டிக் கொண்டு தூங்கும் கண்மணியைப் பார்த்து அறையினுள் நுளைந்தாள் அவள்.
மிரண்ட கண்களோடு, கதவின் பின் ஒளிந்தபடி, தயங்கி தயங்கி தன்னை முதன் முதலில் கண்மணி பார்த்தது நினைவிற்கு வந்தது.
டைரியை மெள்ள அவள் அணைப்பில் இருந்து எடுத்து மேஜையில் வைத்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டு சென்றாள்.

ஏனோ தெரியவில்லை, தனை மறந்து தூக்கத்தில் சிரித்தபடி புரண்டு படுத்தாள், கண்மணி.
ஆழமான சுவாசத்தோடு அமைதியான ஒரு உறக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தாள்.

தூங்கட்டும் தூங்கட்டும்.
இன்னும் சற்று நேரத்தில் ஜன்னல் வழியே வரும் சூரிய கதிர் கண்மணியை எழுப்பி விடும், வெளிச்சமான நாளையை நோக்கி…

 

pic courtesy: http://data.whicdn.com/

கண்மணி

அவள் பெயர் கண்மணி. அவளுக்கு ஆறு வயது. அவளுக்கு சாக்லேட் என்றால் கொள்ளை பிரியம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு தோழியோடு கதைகதைகும் அக்காவின் கையில் ஒட்டி இருக்கும் சாக்லேட் நக்கும் அளவிற்கு பிரியம்.சாக்லேட் தாளை குப்பையில் பார்த்தால் கூட பாய்ந்திர வேண்டியது. சுமிக்கு தன் குழந்தை இப்படி இருப்பதை நினைத்தால் எரிச்சலாக இருக்கும்.நேற்று கூட இப்படி தான் கடைசி பேருந்து பிடிக்கும் நேரத்தில் தெரு ஓர கடை ஒன்றில் சாக்லேட் பார்த்து விட்டு நடு ரோட்டில் உருண்டு அழுகை, வந்த கோவத்திற்கு பொளீர் என்று ஒரு அறை விட்டாள் சுமி. ஆட்டோ பிடித்து போகும் வழி எல்லாம் ஒரே திட்டு இது நாள் வரை இருந்த கோவத்தை கொட்டியாயிற்று.
கண்மணியோ ஒரு அழுகை இல்லை ஒரு சினுங்கல் இல்லை ஒரு எதிர் பேச்சு இல்லை.
“இந்த காலத்து குழந்தைகளுக்கு எல்லாம் ரொம்ப தான் பிடிவாதம்” என்று .எண்ணினாள்
“இப்பொழுது எல்லாம் குழந்தைகள் குழந்தைகள் மாதிரியா இருக்கிறது” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
தன் பிள்ளை தான் என்றாலும் எங்கு இருந்து தான் வருகிறதோ இந்த கோபம்.

வீடு சென்று சேரும் முன்னரே உறங்கி விட்டாள் கண்மணி. தூக்கி கொண்டு மெத்தையில் படுக்க வைத்தாள். வீட்டார் அனைவருக்கும் உணவு அளித்து உறங்கு வதற்கு மணி பதினொன்று ஆயிற்று.
படுக்கையில் படுத்தால் தூக்கமும் இல்லை. எப்படி வரும்? இவ்வளவு கோவம் இருந்தால் எப்படி தூக்கம் வரும்.
புரண்டு புரண்டு படுத்தாள்.

எப்படி நேரம் சென்றது என்று தெரியவில்லை அதற்குள் ஐந்து மணி அலாரம். எரிச்சலாக இருந்தது எழுந்திருக்கவும் மனம் இல்லை.அடுத்து என்ன என்ன செய்யவேண்டும் என்று எண்ணியவாறே,அருகில் இருக்கும் கண்மணியை எழுப்பாத வண்ணம் புரண்டு புரண்டு படுத்தாள்.
அந்த சலசலப்பு கண்மணியை எழுப்பியதோ என்னவோ திடீர் என்று தன் கை காலை சுமி மீது போட்டு அணைத்தபடியே தழுதழுத்த குரலில் சொன்னாள்,
“அம்மா Sorry மா நா இன்னுமே சாக்லேட் கேக்க மாட்டேன்” என்று.

நெற்றி முடி கோதி கண்மணி என்று கூறுவதற்குள் மறுபடியும் நித்திரையில் ஆழ்ந்து விட்டாள் கண்மணி.
நெற்றியில் முத்தமிட்டு கண்மணியை கட்டி அணைத்தபடி கண்மூடி உச்சி முகர்ந்தாள்.

உண்மை தான், சில சமயம், குழந்தைகள், குழந்தைகள் மாதிரி இருப்பதில்லை.